:திருப்பூர்: 3 ஆயிரத்து 297 கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு

73பார்த்தது
:திருப்பூர்: 3 ஆயிரத்து 297 கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு
திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 297 கொடிக்கம்பங்கள் இருப்பதாகவும், அவற்றை அந்தந்த கட்சியினர் ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் கட்சியினருக்கு இறுதி நோட்டீஸ் வழங்கப்படும். 2 வாரங்களுக்குள் அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கொடிக்கம்பங்களை அகற்றுவார்கள். கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கான செலவை அந்தந்த அமைப்புகள், கட்சிகள் ஏற்கும் என்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் தெரிவித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. நிர்வாகிகள், திருப்பூரில் அவினாசி ரோடு, பி.என். ரோடு சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது குறித்து மனு அளித்தும் அகற்றப்படாமல் உள்ளது. அதை அகற்ற வேண்டும் என்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு அதை ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு கொடிக்கம்பத்தை அகற்ற முனைப்பு காட்டுவதாக கூறினார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கட்சி அலுவலகம் முன்புறம், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதை அகற்றுவது என்பது ஜனநாயக விரோதமானது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம் என்றனர்.

தொடர்புடைய செய்தி