திருப்பூர் ரயில் நிலையத்தில் மது போதையில் தண்டவாளத்தின் இடையே சிக்கித் திணறிய முதியவரை பொதுமக்கள் உதவியுடன் ரயில்வே போலீசார் மீட்டனர்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் இரண்டு பிளாட்பாரம் மட்டும் உள்ள நிலையில் இவற்றைக் கடப்பதற்கு இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முதியவர் மது போதையில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார் போதையில் இருந்த அவர் தண்டவாளத்தில் இறங்கி நடுவே சென்ற நிலையில் அதற்கு மேல் செல்ல முடியாமல் அப்படியே அமர்ந்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் உடனடியாக அவரிடம் சென்று விசாரித்தனர் தான் தண்டவாளத்தை கடக்க முயன்று இறங்கியதாக அவர் தெரிவித்துள்ளார் மேலும் மது போதையில் அவர் இருந்ததால் அவரால் முன்னேறிச் செல்லவும் முடியாமல் தடுமாறியபடி இருந்தார். இதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு நடைமேடையில் அமர வைத்தனர் தொடர்ந்து அவரை பாதுகாப்பாக வெளியே செல்லுமாறு ரயில்வே காவல்துறையினர் அறிவுறுத்தினர்.