திருப்பூர்: 2½ கிலோ கஞ்சாவுடன் வடமாநில வாலிபர் கைது

60பார்த்தது
திருப்பூர்: 2½ கிலோ கஞ்சாவுடன் வடமாநில வாலிபர் கைது
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே கஞ்சா தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமு தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் 2½ கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. 

விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜன் (வயது 20) என்பதும், சொந்த ஊரில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருப்பூரில் விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி