ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் புறப்பட்ட வடமாநில தொழிலாளர்கள், காவல்துறையினரையும் மீறி ஓடும் ரயிலில் ஏறி இடம் பிடித்தனர்.
பின்னலாடை நகரான திருப்பூரில் சுமார் மூன்று லட்சம் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இங்கேயே தங்கி பணியாற்றி வருவதால் தீபாவளி, மகர சங்கராந்தி மற்றும் ஹோலி பண்டிகைகளுக்கு தங்களை சொந்த ஊருக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் வரும் மார்ச் 14ஆம் தேதி வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதால் திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்கள் இன்று ரயில் மூலம் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கினர். வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் கூட்டம் இருந்ததால் ரயில் நிலையத்தில் தமிழக ரயில்வே காவல்துறையினர் 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரயில்வே காவல்துறையினர் கையில் ஒலிபெருக்கியுடன் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழில் ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு மேற்கொண்டனர். இன்று எர்ணாகுளத்தில் இருந்து டாட்டா நகர் செல்லக்கூடிய ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் காவல்துறையினரையும் மீறி ஓடும் ரயிலில் ஏறி பயணிகள் இடம் பிடித்தனர், மேலும் அடுத்தடுத்து செல்லக்கூடிய தன்பாத், ரத்தீசாகர் ஆகிய ரயில்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பண்டிகை காலங்களில் கூடுதல் ரயில் இயக்கினால் இருக்கும்.