சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

68பார்த்தது
சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
குண்டும், குழியுமான திருப்பூர்-தாராபுரம் சாலை
சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

திருப்பூர்-தாராபுரம் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீருக்கான குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. தற்போது அந்த இடத்தில் சாலை மேடு பள்ளமாகவும், கற்களாகவும் உள்ள தால் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதா வது: -
திருப்பூர்-தாராபுரம் சாலையில் பழைய பஸ் நிலையம் அருகே
இருந்து தெற்கு போலீஸ் நிலையம் வரை குடிநீருக்காக சாலையின்
நடுவே குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிக்காக 3நாட்கள் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக
தாராபுரம் மற்றும் காங்கயம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள்
ராஜீவ் நகர், எம். ஜி. பி. ஷோரும் வழியாக பழைய பஸ் நிலையம்
வந்தன. குடிநீருக்காக குழாய் பதிக்கும் பணி முடிந்து சாலை சீரமைக் காமல் உள்ளதால் சாலை மேடு பள்ளமாகவும், கற்களாகவும் காணப்படுகிறது. இதனால் சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை மேடு பள்ளமாக காணப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சாலை மோசன நிலையில் உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சாலையை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்தி