தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜோ அருண் தலைமையில் ஆய்வுக்கூட்டம் வருகிற 19-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்து கருத்துக் கேட்க உள்ளார்கள். இதனால் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள், மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழுவினரைச் சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையின நலமேம்பாட்டுக்கான கருத்துக்களையும் தெரிவிக்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.