கந்து வட்டி கணக்கு போட்டு மிரட்டல் பாதிக்கப்பட்டவர் மனு

81பார்த்தது
திருப்பூரில் வாங்கிய பணத்திற்கு மேலாக பணத்தை செலுத்தியும் கந்து வட்டி கணக்கு போட்டு மிரட்டல் விடும் நபரிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டு ஒரு பெண் உறவினர்களுடன் மனு!!!

திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பானு ராஜா முகமது தம்பதியினர் இவர் தனது வியாபார தேவைக்காக அதே பகுதியில் வசித்து வரும் சேகர் முனியம்மாள் ஆகியோரிடம் சிறு கடனாக பெற்றுள்ளார் கடன் பெற்ற பாலு ராஜா முகமது தம்பதியினர் கடனுக்கான வட்டித் தொகையை வாராவாரம் கொடுத்து வந்துள்ளனர் இந்நிலையில் வாங்கிய பணத்திற்கு மேல் வட்டி புகையாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தியும் தற்பொழுது அசல் தொகையையும் வட்டியையும் சேர்த்து தர வேண்டும் எனவும் கோரி வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்வதாகவும் கந்துவட்டிக் கும்பலிடம் இருந்து தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய உறவினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி