திருப்பூர் ராயபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக வடக்கு போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 56) என்பவரை கைது செய்து அவரிடம் செல்போன் மற்றும் லாட்டரி சீட்டு டோக்கன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.