திருப்பூர்: எலுமிச்சம்பழம் விலை தொடர் சரிவு

83பார்த்தது
திருப்பூர்: எலுமிச்சம்பழம் விலை தொடர் சரிவு
திருப்பூருக்கு கடந்த 2 மாதத்திற்கும் மேலாக எலுமிச்சம்பழம் வரத்து அதிகரித்து காணப்படுவதால் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், திருப்பூருக்கு பழனி, தேனி, புளியங்குடி மற்றும் வெளிமாநிலமான ஆந்திரா உள்ளிட்ட பகுதியில் இருந்து விற்பனைக்காக எலுமிச்சம்பழம் கொண்டுவரப்படுகிறது. திருப்பூருக்கு கடந்த 2 மாதத்திற்கும் மேலாக எலுமிச்சம்பழத்தின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. 

மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் எலுமிச்சம்பழத்தின் தரத்தை பொருத்து ரூ. 70 முதல் ரூ. 80 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் தேவை அதிகரித்து, வரத்து குறைய தொடங்கியதும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எலுமிச்சம்பழம் தொடர்ந்து விலை குறைவாக விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இவ்வாறு அந்த வியாபாரி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி