பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி அறிவித்த தமிழக அரசுக்குநன்றி.

75பார்த்தது
திருப்பூர்: பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. டிக்கெட் கட்டணம் உயராது எனவும் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி.

திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை ஏசி இல்லாத திரையரங்குகளுக்கு இரண்டு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் ஏ சி திரையரங்குகளுக்கு நான்கு ரூபாயிலிருந்து பத்து ரூபாயாக உயர்த்த வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் ஏசி அல்லாத திரையரங்குகளுக்கான பராமரிப்பு செலவாக இரண்டு ரூபாயில் இருந்து மூன்று ரூபாயாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் ஏசி திரையரங்குகளுக்கு நான்கு ரூபாயிலிருந்து ஆறு ரூபாயாக பராமரிப்பு கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த திருப்பூர் சுப்ரமணியம் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் மேலும் இந்த பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டதால் திரையரங்கு டிக்கெட் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அதிகபட்ச கட்டணமான 190 ரூபாய் என்பதை தொடரும் எனவும் தெரிவித்தார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி