நீட் பயிற்சி மையத்தில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

66பார்த்தது
திருப்பூர், ஆகாஷ் பயிற்சி மையத்தில் முகுந்த் மற்றும் ஆர். விகாஷினி ஆகியோர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்து உள்ளனர்.
ஆகாஷ் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 2024 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முகுந்த் என்ற மாணவர் 705 மதிப்பெண்களை பெற்று அகில இந்திய அளவில் 1127 வது இடத்தையும் விகாஷினி என்ற மாணவி 695 மதிப்பெண்களைப் பெற்று அகில இந்திய அளவில் 2818 இடத்தையும் பெற்று சாதனை படைத்து உள்ளனர். இந்த மாணவர்களை கவுரவிக்கும் விதமாக, பயிற்சி மையத்தில் மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு, நினைவுப்பரிசுகள் வழங்கினர்.  மாணவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைக்கு காரணம் அவர்களது கடின உழைப்பு மற்றும்வணிகப் பிரிவு தலைவர தீரஜ் மிஸ்ரா கூறுகையில்இந்தியா முழுவதுஉள்ள 315 ஆகாஷ் பயிற்சிமையங்களில் 4 லட்சத்துக்கும்அதிகமான மாணவர்கள்பயில்கின்றனர்.   ஒவ்வொரு மாணவரும் தனித்துவமான மற்றும் தனிப்பட்ட தேவைகளை கொண்டிருப்பதை உணர்ந்து தேர்வு தயாரிப்பில் மாணவர்களை மையமாக கொண்ட அணுகுமுறையை ஆகாஷ் எஜுகேஷன் சேவை உதவுகிறது. எளிமைப்படுத்தி அளிக்கப்படும் பயிற்சிகள் மூலம் மாணவர்கள் இந்த சாதனை படைத்துள்ளனர். என்றார். இதுகுறித்து மாணவர் முகுந்த் கூறுகையில், ‘ஆகாஷ் மையத்தின் சிறப்பான பயிற்சியும், கடினமான உழைப்பும் மாணவர்களுக்கு வெற்றிக்கு வழிவகுப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி