சாய ஆலை உரிமையாளர்கள் பயிற்சி மையம் திறப்பு விழா

84பார்த்தது
சாய ஆலை உரிமையாளர்கள் பயிற்சி மையம் திறப்பு விழா
பயிற்சி பெற்ற தொழிலாளர்களை தயார் செய்து தொழிற்சாலைகளில் பணியமர்த்த உதவுவதற்காக ராயபுரத்தில் உள்ள சாய ஆலை உரிமையாளர்கள் சங்க அலுவலக வளாகத்தில் பயிற்சி மையம் தொடங்கப்பட் டுள்ளது. அத்துடன் செய்முறை பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பரிசோதனை கூடமும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி மையம் மூலம் முதலில் சாய ஆலைகளுக்கு தேவையான லேப் டெக்னீசி யன்களை தயார் செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெறுப வர்கள் அனைவரும் பயிற்சி காலம் முடிந்தவு டன் நேரடியாக சாய ஆலைகளில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இங்கு ஒருமாத பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சி மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பயிற்சி மையத்தை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் திறந்துவைத்தார். சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் 2-வது மாடியில் செயல்படும் சித்ராவின் பரிசோதனை கூடத்தை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே. எம். சுப்பிரமணியன் திறந்து வைத்தார். திருப்பூர் சாய ஆலை உரிமையா ளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் அனைவ ரையும் வரவேற்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி