உண்டியல் பிரிப்பு:
பெருமாள், ஈஸ்வரன் கோவிலில் ரூ. 11 லட்சம் காணிக்கை வசூல்
திருப்பூர் ஈஸ்வரன் கோவில், வீரராகவப்பெருமாள் கோவில்களில் உண்டியல் பிரிக்கும் பணி காலை நடந்தது.
கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமணசாமி
கோவில் உதவி ஆணையர் நந்தகுமார் மேற்பார்வையில்
நடைபெற்றது. முதலில் ஈஸ்வரன் கோவில் உண்டியல் பிரிக்கப்பட்டு அதில் வசூலான ரூபாய் நோட்டுகள், சில்லரை
நாணயங்கள், மற்றும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய
தங்கம், வெள்ளி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கணக்
கிடப்பட்டன. பின்னர் வீரராகவப்பெருமாள் கோவில் உண்டியல் பிரிக்கப்பட்டு வசூலான பணம் எண்ணப்பட்டது.
இந்த பணியில் ஸ்ரீ வாரி சேவா அறக்கட்டளையை சேர்ந்த பலர் உள்பட சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப்ப ணித்திட்ட அலகு-2 மாணவ, மாணவிகளும் கலந்துகொண்ட னர். திருப்பூர் பெருமாள், ஈஸ்வரன் கோவிலின் செயல் அலு வலர் சரவணபவன், இந்து சமய அறநிலையத்துறையின் திருப்பூர் சரக ஆய்வாளர் கணபதி, நீதிமன்ற ஆய்வாளர் வீரப்பசாமி ஆகியோர் இந்த பணிகளை கண்காணித்தனர்.
மேலும் உண்டியல் பிரிக்கப்பட்டது முதல் கடைசி வரைக்கும் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இதில் திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 5 லட்சத்து 44 ஆயிரத்து 504 ரொக்கம், 23 கிராம் தங்கம், 101 கிராம் வெள்ளி ஆகியவை வசூலாகியது. பெருமாள் கோவில் காணிக்கையாக ரூ. 6 லட் சத்து 29 ஆயிரத்து 869 ரொக்கம், 42 கிராம் தங்கம், 108 கிராம் வெள்ளி ஆகியவையும் வசூலாகியது. இரண்டு கோவில்களிலும் சேர்த்து ரூ. 11 லட்சத்து 74 ஆயிரத்து 373 வசூலாகியுள்ளது.