திருப்பூர்: இதய துடிப்பு பதிவு பரிசோதனை கருவி வழங்கும் நிகழ்ச்சி

64பார்த்தது
திருப்பூர்: இதய துடிப்பு பதிவு பரிசோதனை கருவி வழங்கும் நிகழ்ச்சி
திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி உப்பிலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திருப்பூர் மேற்கு ரோட் டரி சங்கம் சார்பில் அதன் உறுப்பினர் கார்லோ டெக்ஸ் டைல்ஸ் உரிமையாளர் முத்துக்குமார் ரூ. 1 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான இதய துடிப்பு பதிவு பரிசோதனை கருவியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி, டாக்டர் சஹிதா பர்வீன், சுகாதார மேற்பார்வையாளர் கந்தசாமி, சுகாதார ஆய்வாளர்கள் யுவராஜ், விஜய், மற்றும் திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள், பல்லடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி