திருப்பூர்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வாழ்த்து

82பார்த்தது
திருப்பூர்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வாழ்த்து
தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக மேயர் ந. தினேஷ்குமார், வடக்கு மாநகர செயலாளராக ஈ. தங்கராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ளனர். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தி.மு.க. வடக்கு மாவட்ட, மாநகர செயலாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி 15 வேலம்பாளையம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. 

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ரோபோ டி. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். அந்த கட்சி நிர்வாகிகள் தினேஷ்குமார், தங்கராஜ் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

நிகழ்ச்சியில் கொ.ம.தே.க. மாவட்ட துணை செயலாளர் தம்பி வெங்கடாசலம், பொருளாளர் வேலுமணி, திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் தேவராஜ், மண்டல செயலாளர்கள் பொன்னுசாமி, கோவிந்தராஜ், கதிரேசன், மாநகர தலைமை நிலைய செயலாளர் ஆனந்தகுமார், மேற்கு மண்டல மகளிரணி செயலாளர் நிர்மலா, ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணி, தீரன் தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் சிவசாமி மற்றும் மாநகர, வார்டு, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மேலும் தி.மு.க. 15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் கொ. ராமதாஸ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார்காலனி எம்.எஸ். மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி