இலவச கண் சிகிச்சை முகாம்

50பார்த்தது
இலவச கண் சிகிச்சை முகாம்
ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன் சங்கம் சார்பில் திருப்பூர் பெரியார்காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் கவிதாலட்சுமிநகர் தொடக்கப்பள்ளிகளில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. சங்க தலைவர் பழனி சாமி தலைமை தாங்கினார். செயலாளர் ரவிச் சந்திரன், திட்ட தலைவர் வேலுசாமி, உடனடி முன்னாள் தலைவர் கார்த்திகேயன், முன் னாள் செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். தி. மு. க. 15 வேலம்பா ளையம் பகுதி செயலாளர் கொ. ராமதாஸ், 14-வது வார்டு கவுன்சிலர் சகுந்தலா ஈஸ்வ ரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சங்க உறுப்பி னர்கள் வடுகநாதன், ஆறுச்சாமி ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி தலைமையாசிரியை கள் பொற்கொடி, ஈஸ்வரி, ரோட்டரி சங்க உறுப்பினர்கள் ஜெயமணி, ஜெயப்பிரகாஷ், மேலாளர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி