திருப்பூரில் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மலர் தூவி மரியாதை!!
முன்னாள் பாரதப் பிரதமரும் பொருளாதார முனைவருமான டாக்டர் மன்மோகன் சிங் நேற்றைய தினம் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அவர்களின் நினைவை போற்றும் வகையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் தெற்கு காங்கிரஸ் மற்றும் திருப்பூர் மாநகர காங்கிரஸ் கலை பிரிவு சார்பில் மாநில செயலாளர். டி. டி. கே. சித்திக் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் திரு உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநகர கலை பிரிவு தலைவர். சுந்தர்ராஜ், தெற்கு பகுதி காங்கிரஸ் தலைவர். மணிவாசகம், மண்டல தலைவர். ராமு, மண்டல தொழிற்சங்க செயலாளர்.
பத்மநாபன், கலை பிரிவு நிர்வாகிகள். ராஜேந்திரன், வேலுச்சாமி, 55 வது வார்டு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர். குமாரசாமி, தொழிற்சங்க மாவட்ட பொறுப்பாளர்.
செந்தில், கலைப்பிரிவுச் செயலாளர். ரவீந்திரன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.