திருப்பூர்: கொரியர் நிறுவனத்தில் தீ விபத்து

53பார்த்தது
திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் பின்னலாடைகளை பல்வேறு பகுதிகளுக்கும் கொரியர் செய்யக்கூடிய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முதலிபாளையம் சிட்கோ பகுதியில் பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்பட்டு மணியகாரம்பாளையம் சாலையில் உள்ள கட்டிடத்தில் வைத்து ஆன்லைன் ஆர்டர்களுக்கு ஏற்றவாறு அந்தந்த பகுதி வாரியாக அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த கட்டிடத்தில் ஒரு புறத்தில் இன்று காலை தீ எரிய தொடங்கியுள்ளது. இதனைக் கண்டு பணியில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறிய நிலையில் நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தின் காரணமாக கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது மட்டுமல்லாமல் கட்டிடத்தின் பல்வேறு பகுதிகள் விரிசல் அடைந்து இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிடத்தின் பின்புறத்தில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நிட்டிங், டைலரிங் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய நிலையில் அவற்றுக்கு தீ பரவாமல் இருக்கும் வகையிலான நடவடிக்கைகளிலும் தீயணைப்புத் துறையினர் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி