கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

69பார்த்தது
காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹிப் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீ திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக பொங்கல், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹிப் 130வது பிறந்தநாள் விழா திருப்பூர் வடக்கு மாவட்ட இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கொண்டாடப்பட்டது.

திருப்பூர் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி. சிராஜுதீன் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து. சுதந்திர தொழிலாளர் யூனியன் (STU) சார்பில் காங்கேயம் சாலை அல் அமீன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 400 பேருக்கு கல்வி உபகரணங்கள் மாவட்டத் தலைவர் சையது முஸ்தபா தலைமையில் வழங்கப்பட்டது. மேலும் பூலாவாரி சுகுமாரன் நகர், செம்மேடு பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிகளில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவுடன் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல் நிர்வாகி குர்பானி பாபு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி