பேருந்து நிலையத்தில் போதை ஆசாமியின் அட்ராசிட்டி

60பார்த்தது
மது போதையில் பெண்ணின் சேலையை பிடித்து முகத்தை துடைத்த மினி பேருந்து ஓட்டுநருக்கு கும்மாங்குத்து.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் மினி பேருந்து ஓட்டுனராக செயல்படும் உசிலம்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் பணி முடிந்து மது அருந்துள்ளார் அளவுக்கு அதிகமான போதையில் பேருந்து நிலையத்தில் சென்றுகொண்டிருந்த பெண் பயணி ஒருவரின் சேலையை பிடித்து இழுத்து தனது முகத்தை துடைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணியின் உறவினர்கள் போதையில் இருந்த ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி