குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

82பார்த்தது
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
நல்லூர் மண்டல அலுவலகம் முன்புகுழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்


திருப்பூர்-காங்கயம் சாலை நல்லூர் பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்து வருகிறது. அந்த வகையில் நேற்று நல்லூர் 3-வது மண்டல அலுவலகத்துக்கு எதிரே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையோரம் குளம் போல் தண்ணீர் தேங்கி காணப்பட் டது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலையும் பழுதடைந்து, குண்டும், குழியுமாக காணப்ப டுகிறது. தொடர்ந்து இதுபோன்ற குடிநீர் குழாய் உடைப்பது பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் இது போன்ற குழாய் உடைப்பினால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாக் கடையில் கலந்து வருகிறது. இதில் மாநகராட்சி நிர்வாகம் அலட் சியம் காட்டுவதால் குடிநீர் வீணாகுவது மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது போன்ற குடிநீர் குழாய் உடைப்புகளை உடனடியாக சரி செய்து குடிநீர் வினியோ கத்தை முறையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத் துள்ளனர்.

தொடர்புடைய செய்தி