திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெற்றி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், தமிழ்நாடு பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பில் தலைவர் சக்கரையப்பன் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும், படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சம் இடம் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்களுக்கு பயணப்படி உயர்வு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ரேஷன் பொருள் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் பவித்ரா, செயலாளர் காளிமுத்து, பொருளாளர் தேவி பல்லடம் சண்முகம் , உட்பட பலர் கலந்து கொண்டனர்.