தீர்த்தக்குடம் சுமந்து வந்த பக்தர்கள்

60பார்த்தது
தீர்த்தக்குடம் சுமந்து வந்த பக்தர்கள்
திருப்பூர் பொங்குபாளையம் கிராமம் பள்ளி பாளையத்தில் மகா கணபதி, மாகாளியம் மன், ஜலகண்டம்மன், கன்னிமார், கருப்பரா யன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் உள்ளது. மாகாளியம்மன் கோவில் புதுப்பிக் கப்பட்டு வருகிற 9-ந் தேதி கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. இதற்காக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கும்பாபிஷேக விழா தொடங்கி யது. நேற்று காலை 7. 45 மணிக்கு மேல் 9 மணிக்குள் மகா கணபதிஹோமம், சர்வதே வதா, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. பின்னர் கோபுர கலசங்கள் திருவீதி உலாவாக கொண்டு வரப்பட்டு கோபுரத்தில் வைக்கப்பட்டு, சுதைகளுக்கு கண் திறக்கப் பட்டது. மாலை 3 மணிக்கு திருமுருகநாதசு வாமி கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. மேலும் கோவிலுக்கு காசி, ராமேசுவரம், குடகு (தலை காவிரி), பழமுதிர் சோலை, திருச் செந்தூர், கொடுமுடி, அவினாசி, திருமூர்த்தி மலை, மேட்டுப்பாளையம், பெரிய கிணறு மாகாளியம்மன், கட்டளை மாரியம்மன்கோவில் ஆகிய புனித தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. கோவில் கும் பாபிஷேகம் வருகிற 9-ந் தேதி காலை 7. 35 மணிக்கு மேல் காலை 9 மணிக்குள் நடக் கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளை யும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகி றார்கள்.

தொடர்புடைய செய்தி