திருப்பூர் மாநகராட்சி 37-வது வார்டுக்கு உட்பட்ட ராயபுரம் மெயின் ரோடு மற்றும் சூசையாபுரம் பகுதிகளை இணைக்கும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். சூசையாபுரம் பகுதியில் ஆதிதிராவிட மக்கள் வசிப்பதால் அவர்கள் மாற்று சமூ கத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதி வழியாக செல்லாத வகையில் தீண்டாமை சுவர் கட்டி வைத்துள்ளதாகவும், பள்ளி மாணவர்கள் 1 கிலோ மீட்டர் தூரம் பள்ளிக்கு சுற்றி செல்வ தாகவும் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து காலை திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையாளர் வினோத், திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் மற் றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து நில ஆவணங்களை பார்த்து ஆய்வு செய்தனர். போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். கடந்த 1933-ம் ஆண்டு முதல் சம்பந்தப் பட்ட பாதை பட்டா இடமாக இருந்ததாகவும், கடந்த 1984-ம் ஆண்டு முதல் நகராட்சிக்கு சொந்தமான சாலை என ஆவ ணங்களில் உள்ளதாகவும் வருவாய்த்துறையினர் தெரிவித்த னர். 40 அடி அகல சாலை இருப்பதாக ஆவணங்களில் உள் ளதாக தெரிவித்தனர்.
அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனம் மற்றும் வீட்டு காம்ப வுண்டு சுவர், 40 அடி அகல பாதையை அடைத்து ஆக்கிர மிப்பு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. சுவரை அகற்ற 2 நாட்கள் அவகாசம் கேட்டு அதிகாரிகளுடன் அவர்கள், வாக்கு வாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 8 அடி உய ரம் கொண்ட சுவரை பொக்லீன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினார்கள். மறுபுறம் உள்ள இரும்பு கதவை தாங்களே அகற்றிக்கொள்வதாக தெரிவித்ததால் அங்கிருந்து அனைவ ரும் கலைந்து சென்றனர்.