குடிநீர் குழாய் பதிக்க வெடி வைக்கப்பட்டதால் வீடுகளில் விரிசல்
பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருப்பூர் -தாராபுரம் சாலை கோவில் வழி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெருமாள் கோவில் பின்புறம் 4-வது குடிநீர் திட்ட குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதி முழுவதும் பாறைகளாக இருந்ததன் காரணமாக வெடிவைத்து பள்ளம் தோண்டும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. குடியிருப்புக்கு மத்தியில் வெடி வைத்து பள்ளம் தோண்டியபோது மணல் மற்றும் கற் கள் அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் விழுந்ததாக வும், பயங்கர வெடி சத்தத்தின் காரணமாக வீடுகளில் விரி சல் ஏற்பட்டு வீடுகளும் சேதமடைந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். வெடி வைக்கும் முன்னர் முறையான அனுமதி பெறவில்லை எனவும் குடியிருப்பு பகுதி பொதுமக் களுக்கு தெரிவிக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட் டினர்.
இப்பணியில் ஈடுபட்ட இருவரை சிறைபிடித்த பொதுமக்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.