நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

71பார்த்தது
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உணவுப் பொருள்வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின்சார்பில் நுகர்வோர்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்பொருட்கள் வாங்குவ தில் நுகர்வோர்களின் உரிமைகளையும், கடமைகளையும் அனைவரும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் பல்வேறு முன்னெ டுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நுகர்வோர் பயன்பாடு குறித்தும், பொருட்களின் தரம், பொருட் களின் சரியான எடை அளவு, கலப்படமற்ற பொருட்கள் வாங் குதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எல். ஆர். ஜி. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் விழிப்பு ணர்வு பேரணியில் கலந்து கொண்டு "உணவே மருந்து உடலே பிரதானம், விளம்பரத்திற்கு மயங்காதே விழிப்பு ணர்வை இழக்காதே வளமான எதிர்காலத்திற்கு பொறுப்பான நுகர்வு, தரம் என்ற மந்திரம் வெற்றியின் தந்திரம்" என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி தென்னம்பாளையம் வழியாக எல். ஆர். ஜி. கல்லூரியில் முடிவடைந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி