திருப்பூர்: ஏலம் விட வேண்டும்; ஆணையாளரிடம் நுகர்வோர் அமைப்பினர் மனு

59பார்த்தது
திருப்பூர்: ஏலம் விட வேண்டும்; ஆணையாளரிடம் நுகர்வோர் அமைப்பினர் மனு
திருப்பூரை சேர்ந்த பல்வேறு நுகர்வோர் அமைப்பு நிர்வாகிக ளான கிருஷ்ணசாமி, சண்முகசுந்தரம், சுப்பிரமணியம் உள் ளிட்டவர்கள் மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தியை சந் தித்து மனு கொடுத்தனர். 

அந்த மனுவில், 'திருப்பூர் மத்திய பஸ் நிலையத்துக்கு எதிரில் மாநகராட்சிக்கு சொந்தமான தின சரி வணிக வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்கள் பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்படுகிறது. இந்த கடைகளை பொது ஏலத்தில் விட்டால் மாநகராட்சிக்கும், அரசுக்கும் வரு மானம் கிடைக்கும். ஆனால் பொது ஏலம் இல்லாமல் ஒருசில ருக்கு கடைகளை வாடகைக்கு கொடுப்பதாக தகவல்கள் வெளிவருகிறது. 

அப்படி கொடுத்தால் சட்டத்துக்கு புறம்பான செயலாகும். மாநகராட்சிக்கு வரும் வருமானம் தடம் மாறி, வருவாய் இழப்பு ஏற்படும்.கடைகளை பொது ஏலம் இல்லாமல் குறைந்த வாடகைக்கு கொடுத்தால் அவர்கள் உள்வாடகைக்கு விட்டு பெரிய அள வில் லாபம் அடைவார்கள். எனவே கட்டி முடிக்கப்பட்ட கடை களை சட்டவிதிகளுக்கு உட்பட்டு பொது ஏலத்துக்கு அறிவிப்பு செய்து முறையாக ஏலம் விட வேண்டும்' என்று கூறியுள்ள னர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி