திருப்பூர்: 24 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர் கிறிஸ்துராஜ்

50பார்த்தது
திருப்பூர்: 24 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர் கிறிஸ்துராஜ்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு 531 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில், தாட்கோ சார்பில் 21 தூய்மைப்பணியாளர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையை கலெக்டர் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். 

மூளை, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரூ. 8 ஆயிரத்து 900 மதிப்புள்ள சக்கர நாற்காலியையும், ஒருவருக்கு ரூ. 6 ஆயிரத்து 588 மதிப்பிலான அமர்வு இருக்கையும், ஒருவருக்கு ரூ. 898 மதிப்பிலான கைதாங்கியையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி