அவினாசி பழனியப்பா சி. பி. எஸ். இ. பள்ளி யில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப் பட்டது. நில மறுசீரமைப்பு, பாலைவனமாக் கல் மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை என்னும் 2024-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் கருப்பொருளை விளக்கும் பாதாகைகளுடன் மாணவர்கள் சுற்றுச்சூழல் குறித்த உறுதி மொழி ஏற்றனர்.
சுற்றுச்சூழல் தூய்மையின் அவசியம் பற்றி யும், தூய்மையின்மையால் வரும் தீங்குகள் குறித்தும் பள்ளியின் முதல்வர் வித்யாசாகர் மாணவர்களிடையே உரையாற்றினார். ஆசி ரியை சுவாதிப்பிரியா சுற்றுச்சூழல் பாதுகாப்ப தன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். விழா வில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற் றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.