திருப்பூர் டும் லைட் மைதானம் அருகே ஸ்ரீவாரி பைனான்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருபவர் பிரகாஷ். இவருக்கும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ குணசேகரனுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்ததாகவும் 2023ம் ஆண்டு கணக்கு முடித்த நிலையில் மேலும் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என குணசேகரன் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகவும் தனது உறவினர்களான கோவிந்தராஜ் மற்றும் தியாகராஜன்மூலம்தொடர்ந்து மிரட்டல்விடுத்துவந்ததாகவும் மேலும் குணசேகர் மூலம் பழக்கமான ராஜேஷ் என்பவரது நிறுவனத்தில் பங்குதாரராக கொடுத்த 13 கோடி நிலத்தின் ஆவணங்களை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிய தாகவும் இதனால் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் புதன்கிழமை இரவு பைனான்ஸ் அலுவலகம் வெளியே நின்றிருந்த பிராகஷை தேடி வந்த ரமேஷ் என்பவர் முன்னாள் எம்எல்ஏ குணசேகரை பகைத்துக் கொண்டு வாழ்ந்து விடுவாயா எனகூறிதான் மறைத்து வைத்திருந்தகத்தியை எடுத்து சராமாரியாககுத்தி உள்ளார். தடுக்கச்சென்ற யூசுப், சங்கீத ராஜன், கௌரிசங்கர் என்ற 3 பேரையும்மறைத்து வைத்திருந்தஅரிவாள் கொண்டுதாக்கி உள்ளார். இதில்4பேருக்கும் காயம் ஏற்பட்டநிலையில் ரமேஷை பிடித்துதிருப்பூர்தெற்கு காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர். காயமடைந்த4பேரில் 3 பேர் கோவைதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்றுவருகின்றனர்