திருப்பூர் ஜே.ஜி. நகர், 2-வது வீதியைச் சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 68). இவர் நூல் மில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த சிவக்குமார் (45) என்பவர் ஜோதிமணியிடம் ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான பனியன் துணிகளைப் பெற்றுள்ளார். ஆனால் சிவக்குமார் நீண்ட நாட்களாகப் பனியன் துணிக்கான பணத்தைத் திரும்பக் கொடுக்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து ஜோதிமணி வடக்குப் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.