திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு வாக்கி டாக்கி கருவிகள் புதிதாக வாங்கப்படுகிறது. இதற் காக கனரா வங்கி தனது சி. எஸ். ஆர். நிதி யில் இருந்து ரூ. 4 லட்சத்து 93 ஆயிரத்து 299-ஐ மாநகராட்சிக்கு வழங்குகிறது. இதற் கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
கனரா வங்கி மண்டல மேலாளர் சந்தீப்குமார் சின்கா, காசோலையை மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவரிடம் வழங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்கா பிரசாத், உதவி ஆணையா ளர் (கணக்கு) தங்கவேல்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.