திருப்பூரில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்- காவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தங்களது ரத்த கொடையினை தானமாக வழங்கினர்!!
திருப்பூரில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் காமாட்சி அம்மன் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் தாராபுரம் சாலை வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ரத்ததான முகாமினை கே. வி. ஆர். நகர் சரக உதவி ஆணையர் நாகராஜன் கலந்துகொண்டு ரத்ததான முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற ரத்ததான முகாமில் காவல்துறையைச் சேர்ந்த காவலர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது ரத்த கொடையினை தானமாக வழங்கினர். இந்த ரத்ததான முகாமில் பெறப்பட்ட 100 யூனிட் ரத்தக்கொடைகள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தெற்கு காவல் ஆய்வாளர். கணேஷ்குமார், காமாட்சி அம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.