மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி!!

53பார்த்தது
திருப்பூரில் தேசிய மின்சிக்கன வாரவிழாவையொட்டி தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தேசிய மின்சிக்கன வாரவிழா கடந்த 14 ந் தேதி துவங்கி 20 ந் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வகையில். திருப்பூர் கோட்டம் மின் பகிர்மான கழகம் சார்பில் விழிப்புணர்வு பேரணியானது திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வித்தியாலயம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து துவங்கியது. விழிப்புணர்வு பேரணியை திருப்பூர் மேற்பார்வை பொறியாளர். விஜயேஷ்வரம் துவக்கி வைத்தார். பல்லடம் சாலையில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியனது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
முடிவடைந்தது. இந்த பேரணியில் மின்வாரிய ஊழியர்கள் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதே போல் மின்வாரிய ஊழியா்கள் மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தியவாறு பங்கேற்றதோடு. , வீடுகளில் மின் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த பேரணியில் செயற்பொறியாளர். சண்முகசுந்தரம், உதவி செயற்பொறியாளர்கள். டேனிஷ் வேணு, மாரிமுத்து, விசுவலிங்கம், சார்லஸ், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி