தமிழ்நாடு கராத்தே சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான சப்-ஜூனியர் கராத்தே போட்டி திருச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் திருப்பூர் கராத்தே சங்கத்தின் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
அதில் 4 பேர் முதலிடம் பெற்று வருகிற 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு வெவ்வேறு பிரிவுகளில் தேர்வு பெற்றுள்ளனர். அதன்படி குமிட்டி பிரிவில் ஜோகின் மேத்யூ (வயது 10), பாலதியா (13), கட்டா பிரிவில் இன்ப உதயகுமார் (7), குமிட்டி பிரிவு கேடட் திவ்யா ஆகியோருக்கு பாராட்டு விழா மாவட்ட சங்கத்தின் சார்பில் நடந்தது.
மேலும் தேசிய போட்டிக்கு செல்லும் மாணவர்களுக்கு நிதி உதவியாக தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது. விழாவை ஏற்பாடு செய்தவர்கள் சங்க தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் சக்திவேல், பொருளாளர் கவுதம், டைரக்டர் சக்திவேல், ஆர். சி. சேர்மன் சரவணன் ஆகியோர் ஆவர்.