திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மது மறுவாழ்வு மையத்தில் உதவி மருத்துவராக பணியாற்றி வந்த ஹரிகரகுகன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி உறைவிட மருத்துவ அதிகாரியாக நேற்று (ஏப்ரல் 1) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.