அண்ணாமலை திருப்பூர் வருகை நிர்வாகிகள் முன்னேற்பாடு ஆலோசனை

81பார்த்தது
அண்ணாமலை திருப்பூர் வருகை நிர்வாகிகள் முன்னேற்பாடு ஆலோசனை
தமிழக பா. ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில அளவிலான மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் வரு கிற 11-ந் தேதி பெருமாநல்லூர்- வாவிபாளை யம் சாலை கிருஷ்ண மகாலில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத் தும் வகையிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மலர்கொடி, மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், பாலசுப்பி ரமணி, பொருளாளர் நடராஜ் உள்ளிட்டவர் கள் கலந்து கொண்டனர்.

மாநில தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும், கூட்டத்தில் நிர்வாகிகள் தவறா மல் பங்கேற்கவும், கூட்டத்துக்கான ஏற்பாடு கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி