திருப்பூர் சிவசேனா கட்சியின், யுவசேனா மாநிலத்தலைவர் திருமுருக தினேஷ் செய்தியாளர்களை சந்தித்த போது
திசை திருப்பும் வகையில் பேசிவரும் ஆர். எஸ். பாரதி மீது என். ஐ. ஏ. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அண்ணாமலை ஆடம்பர விளம்பர அரசியல் செய்து வருகிறார். ஹிந்து மத வழிபாட்டை கொச்சைப்படுத்தும் விதமாக செயல்படுகிறார். அண்ணாமலை இது போன்ற செயல்களை கைவிட வேண்டும். செய்தியாளர் சந்திப்பில் ஒருமையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். பாஜக அதிக வாக்குகள் பெற வேண்டும் என்றால் அனைத்து வலதுசாரி இயக்கங்களையும் ஒன்று சேர்க்க வேண்டும். தினமும் பத்திரிகையை திறந்தால் என் படம், டிவி போட்டால் என் முகம் என விளம்பர வேடிக்கை அரசியல் செய்து வருகிறார். புள்ளி விவரங்களால் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் போக்கை அண்ணாமலை கைவிட வேண்டும்.
பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அறிக்கை வெளியிட வேண்டும். நிர்பயா ஸ்குவாட் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. அதனை பெற்று பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.