தமிழகத்தில் மக்களை பயமுறுத்தும் சம்பவங்கள் தினந்தோறும் நடந்து கொண்டுள்ளது. அன்றாட நிகழ்வுகளுக்கு கூட பெண்கள் வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளது. செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் மற்றொருவர் இருப்பதாக கூறுகையில் காவல்துறை மழுப்பலான தகவலை கூறுகிறது. 30ம் தேதி இந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. எங்களை கைது செய்தாலும் சிறைகளை நிரப்புவோம். கேமராவில் பதிவான காட்சிகளை மறைக்க கூட கேமரா செயல்படவில்லை என கூற வாய்ப்பு உள்ளது. யார் அந்த சார் என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.
முன்னாள் எம்எல்ஏ குணசேகர் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை சட்ட ரீதியாக சந்திப்போம் அவர் கடந்த 4 நாட்களாக ஊரில் இல்லை.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என முதலில் தெரிவித்தவர் எடப்பாடி பழனிசாமி. முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவலை பரப்பியவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது.
உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி
2026ல் உறுதியாக எடப்பாடியார் ஆட்சி வரும் ஆண்டு. நிறுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மீண்டும் துவக்கப்படும். 38 லட்சம் செட்டாப் பாக்ஸ் அரசு கேபிள் டிவி மூலம் இருந்தது. இன்று 8 லட்சம் இணைப்புகள் மட்டுமே உள்ளது. நிர்வாக சீர்கேடு காரணமாக அந்த துறை பாதிக்கப்பட்டுள்ளது.