திருப்பூர் மாநகரில் ஆங்காங்கே பூங்காக்கள் அமைக் கப்பட்டுள்ளன. இவை சில இடங்களில் பராமரிப்பின்றி இருப்பதால் பூங்கா காட்சி பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் ராயபுரம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவானது சரியான பராமரிப் பின்றி உள்ளது. இங்கு பூங்காவின் சுற்றுச்சுவர்களில் சிலர் விளம்பர பதாகைகளை கட்டி வருகின்றனர். இதே போல் கட்சி கொடிகளும் கட்டப்படுகின்றன. இதனால் பூங்காவின் சுற்றுப்புற பகுதி அலங்கோலமாகி வரு கிறது. இந்த விஷயத்தை முளையிலேயே கிள்ளி எறி யாவிட்டால் விரைவில் பூங்காவை சுற்றிலும் ஒவ்வொரு வரும் போட்டி போட்டு விளம்பர பதாகைகள் வைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதனால் பூங்காவின் அழகு பாழ்படும். எனவே மாநக ராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடி நடவ டிக்கை எடுத்து மேலும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் பார்த் துக்கொள்ள வேண்டும் என்றும், பொது இடத்தை ஆக் கிரமிப்பது, அலங்கோலப்படுத்துவது தவறு என்பதை உணர்ந்து பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.