திருப்பூர் ஆண்டிபாளையம் 38-வது வார்டு பூத் கமிட்டி மற் றும் வார்டு பொறுப்பாளர் அறிவிப்பு கூட்டம் சின்னாண்டிபா ளையம் பகுதியில் நடைபெற்றது. வார்டு பகுதிக்கு உட்பட்ட இளைஞர் இளம் பெண்கள், மகளிர் அணி பூத் கமிட்டி மற் றும் 38-வது வார்டுக்கு பொறுப்பாளர் அறிவிக்கும் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம். எல். ஏ. , முன்னாள் எம். எல். ஏ. கரைப்புதூர் நடராஜன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் கே. என். சுப்பிரமணி, வீரபாண்டி மேற்கு பகுதி செயலாளர் டி. சுரேந்தர் மற்றும் 38-வது வார்டுக்கு உட்பட்ட நிர்வாகிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.
கூட்டத்தில் பூத் கமிட்டி எவ்வாறு அமைத்து அ. தி. மு. க. வேட் பாளர்களுக்கு அதிகமான வாக்குகள் சேகரிக்கும் திட்டங்களை பற்றி நிர்வாகிகளிடம் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் தற்போதைய 38-வது வார்டுக்குட்பட்ட அனைத்து பகுதிக்கும் துைணச் செயலாளராக செயல்பட்டு வரும் ஜி. என்.
பிரபு 38- வது வார்டு பொறுப்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட் டார். கூட்டத்தில் அ. தி. மு. க. உறுப்பினர்கள் வார்டு பொறுப்பா ளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.