பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்

79பார்த்தது
பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள கட்டணமில்லா பொது சுகாதார வளாகம் பயன்பாட்டில் இல்லாமல் தற்போது பூட்டப் பட்டு உள்ளது. அதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திற்கு பல்வேறு பகுதிக ளுக்கு செல்லும் பயணிகள் வருகின்றனர். அவர்கள் தேவைக்காக திருப்பூர் மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 3 லட் சத்து 84 ஆயிரத்தில் கட்டணமில்லா பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பயன்பாட்டில் இருந்த பொதுசுகாதார வளாகம் தற்போது பூட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் கட்டண சுகாதார வளாகத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. அவசரத் திற்கு வரும் பயணிகள் பொது சுகாதார வளாகம் பூட்டப்பட்டு இருப்பதால் அதன் அருகே சிறுநீர் கழித்துவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுத்து பூட்டப்பட்டுள்ள கட்டண மில்லா பொதுசுகாதார வளாகத்தை பொதுமக் கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.

தொடர்புடைய செய்தி