கருப்பு பட்டை அணிந்து ஊர்வலம்

172பார்த்தது
நிலை கட்டணம் மற்றும் பரபரப்பு நேரக் கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் தமிழக அரசின் மின்சார வாரியம் சார்பாக சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள நிலைக் கட்டணம் மற்றும் பரபரப்பு நேர கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் சிறு குறு நிறுவனங்களை இணைத்து தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு என உருவாக்கப்பட்டு அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும் எந்தவித கோரிக்கையும் நிறைவேற்றப்படாததன் காரணமாக ஏற்கனவே உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் , தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் மற்றும் தபால் அனுப்பும் போராட்டம் உள்ளிட்டவை நடைபெற்ற நிலையில் இன்று திருப்பூரில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பல்லடம் சாலையில் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். நிலை கட்டணம் மற்றும் பரபரப்பு நேர கட்டணம் உள்ளிட்டவை காரணமாக தொழில்துறை நலிவடைந்து வருவதால் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதை உணர்ந்து தமிழக அரசு தொழில் துறையினரின் ஐந்தம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழில்துறையினர் திரண்டு வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வருகின்ற 16ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்திலும் திருப்பூரிலிருந்து திரளாக கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி