திருப்பூர் மாநகராட்சியில் வரி உயர்வு அதிகரிக்கப்பட்டதாகவும், மேலும் கந்துவட்டி போல் வரி வசூல் செய்வதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி மற்றும் திமுக மேயர் தினேஷ்குமாரிடம் இன்று மனு அளித்தனர்திருப்பூர் மாநகராட்சி அதிகபட்சமாக வரி உயர்த்திஉள்ளது, அதற்காக மாமன்றகூட்டத்தில் அதிமுகவினர்எதிர்ப்பு தெரிவித்தோம், தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 6% வரி உயர்வு மற்றும் அபராதம் 1% என்று விதிக்கப்பட்டது, பல்வேறு கட்டங்கள் போராட்டம் நடத்தியும் அரசு செவி சாய்க்கவில்லை என்றும், எதிர் வருகின்ற மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும், அதைக் கண்டித்து மனு அளிக்க வந்துள்ளோம், மேலும் திமுக ஆட்சி வரும் போதெல்லாம் வரி உயர்வு ஏற்படுத்துகிறது, ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் வரி குறைப்பு மேற்கொள்ளப்பட்டது என்றும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரி உயர்வுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள், மேலும் திமுகவைச் சேர்ந்த திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் அமைச்சர் நேருவை சந்தித்து வரி உயர்வு தொடர்பாக மனு அளித்துள்ளார், மேலும் வரி குறைக்கும் வரை சாகும் வரை உண்ணாமிர்தம் இருக்கவும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.