நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம்திருப்பூரில் உற்சாகவரவேற்பு

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் ராஜா இவர் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் இவரது 12 வயது மகன் சபரி அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். மாற்றுத்திறனாளியான இவருக்கு நீச்சல் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது இதனை கவனித்த ராஜா மகனின் திறமையை வளர்க்க சிறுவயது முதலே பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று மகனுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்துள்ளார். மேலும் முறையாக மகனின் திறமையை வளர்க்க வேண்டி திருப்பூரில் உள்ள நீச்சல் பயிற்சி மையத்தில் இவரை சேர்த்து கடந்த இரண்டு வருடங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார். அதன் பயனாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று கடந்த வாரம் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான பாரா நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 50 மீட்டர் 100 மீட்டர் மற்றும் 50 மீட்டர் பேக்கேஜ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று சபரி சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்று பதக்கத்துடன் திருப்பூர் திரும்பிய சபரி மற்றும் பயிற்சியாளர் சுதீஷ் இருவருக்கும் சபரியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வது தங்களது லட்சியம் எனவும் அதற்கு சபரியை முழுமையாக தயார் செய்வோம் என நம்பிக்கை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி