ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு பரிசு

375பார்த்தது
ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு பரிசு
இந்திய அரசின் விண்வெளித்துறை, இந்திய விண்வெளி ஆராய்ச்சிமையம் ஸ்ரீஹரிகோட்டா மற்றும் கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி சார்பில் விண்வெளி வாரவிழா கோவை கொங்குநாடு கலை அறிவியல்கல்லூரியில் நடை பெற்றது. இதில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டி கள் நடத்தப்பட்டன. அதில் விண்வெளி சார்ந்த 10-க்கும் மேற் பட்ட மாதிரிகளை ஊத்துக்குளி கொங்குமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி என். கே. சரிகா மற்றும் மாணவர் ஏ. டி. கவிந்திர பிரசாத் ஆகியோர் வடிவமைத்து காட்சிப்படுத்தினர். அந்த மாதிரி கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்ட அள வில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு 3-வது பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கு பள்ளி இயற்பியல் ஆசிரியர் ஈ. பிரித்தி விராஜ் வழிகாட்டி ஆசிரியராக செயல்பட்டார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளியின் தலைவர் ஏ. கே. சி. தியாகரா ஜன், செயலாளர் கே. செந்தில்நாதன், தாளாளர் பி. பாலசுப்பிர மணியன், பொருளாளர் என். சந்திரகேகர், நிர்வாக குழு உறுப் பினர்கள், பள்ளி முதல்வர் எம். கிருஷ்ணமூர்த்தி, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள் பாராட்டினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி