. 47, 96, 59, 998 இழப்பீடு தொகை பெற்று கொடுக்கப்பட்டது.

52பார்த்தது
தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களின் உத்தரவின் பேரிலும் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் குணசேகரன் தலைமையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு 21 அமர்வுகளாக நடைபெற்றது. இதில் 4113 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 2864 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் 451 மோட்டார் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 32, 93, 46, 341 இழப்பீடுப் பெற்றுத் தரப்பட்டது. 75 சிவில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 13, 38, 11, 257 மதிப்பில் இழப்பீடு பெற்று தரப்பட்டது. இரண்டு குடும்ப நல வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு ரூ. 10, 00, 000 இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது. இதேபோல் காசோலை மோசடி வழக்குகள் சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள் வங்கி வராகடன் வழக்குகள் என 2864 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 47, 96, 59, 998/ இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் , சிறப்பு மோட்டார் வாகன மாவட்ட நீதிபதி பாலு, எஸ். சி. டி சிறப்பு நீதிமன்ற மாவட்ட மாவட்ட நீதிபதி பத்மா, குடும்ப நல நீதிபதி பிரபாகரன் , முதலாவது கூடுதல் மாவட்ட பணிகள் ஆணைக் குழு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி