திருப்பூர்: பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

53பார்த்தது
திருப்பூர்: பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்பட்ட பல வஞ்சிபாளையம் பகுதியில் பணம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் பல வஞ்சிபாளையம் பகுதி முழுவதும் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பூங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிலர் கூட்டமாக அமர்ந்திருந்தனர். போலீசார் அந்த வீட்டை சுற்றிவளைத்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் பூங்கா நகரை சேர்ந்த பரமசிவம் (வயது 52), குமார் (54), சக்திவேல் (51), முத்துக்குமார் (45) என்பதும் அவர்கள் அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 2500 மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி