திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், கடந்த சில நாட்களாக மாநகருக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரங்கநாதபுரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது ஆசாத் (வயது 29), ரயான் (32), பரூக் (29) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த 3 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்து, பனியன் நிறுவனங்களில் பணியாற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.