திருப்பூர்: கடந்த 6 மாதத்தில் ரெயிலில் அடிபட்டு 24 பேர் சாவு

0பார்த்தது
திருப்பூர்: கடந்த 6 மாதத்தில் ரெயிலில் அடிபட்டு 24 பேர் சாவு
திருப்பூர் வழியாக பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், வந்தே பாரத் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் செல்கிறது. 

தொடர்ந்து ரெயில் போக்குவரத்து முன்பைவிட அதிகரித்துள்ளதால் தண்டவாளத்தை கடக்கும் பகுதிகள் மற்றும் தண்டவாளம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ரெயில்வே போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை திருப்பூர் ரெயில்வே எல்லையில் 24 பேர் தண்டவாளத்தை கடக்கும் போது எதிர்பாராத விதமாக ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். 

திருப்பூர் ரெயில்வே எல்லையில் விபத்து அதிகம் ஏற்படும் இடங்களில் தற்போது தண்டவாளத்தை பொதுமக்கள் கடக்காத வகையில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் தண்டவாளத்தை கடக்கும் போது எதிர்பாராத விதமாக ரெயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை குறையும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி